இலண்டனில் இடம்பெற்ற விபத்தொன்றில் விமல் சொக்கநாதன் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர், தான் எழுதிய 'லண்டனிலிருந்து விமல்' என்ற நூலை அண்மையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதன் பின்னர், உலக அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீதின் 'வானலைகளில் ஒரு வழிப்போக்கன்' நூலின் அறிமுக விழா கொழும்பில் நடைபெற்றபோது, அந்நிகழ்வினை விமல் சொக்கநாதன் தலைமையேற்று நடத்தியதோடு, நூல் வெளியீட்டிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..