02,Feb 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று (02) இலங்கைக் குவருகை

 சினோபெக் எரிபொருளின் முதல்தொகுதி அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்திமற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனதுடுவிட்டர் பதிவில், குறிப்பிட்டுள்ளார்.


எரிபொருள் நிலையவிநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டபின்னர், சினோபெக் நிறுவனம் நாடுமுழுவதும் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயல்பட்டை ஆரம்பிக்கவுள்ளது.

சினோபெக் நிறுவனம் நேரடியாக அந்நியசெலாவணியை செலவழித்து எரிபொருள்தொகைகளை இலங்கைக்கு கொண்டுவருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.


இதனால் இலங்கையிலுள்ள நிதி நிறுவனங்களுக்கு எவ்விதபிரச்சினையும் ஏற்படாது எனவும், 12 மாத நிதிவசதிகளுடன் எரிபொருள் தொகைகள் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சினோபெக் நிறுவனத்தினால் 45,000 மெட்ரிக் தொன் எரிபொருள், முதல்தொகையாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக இலங்கையில் உள்ள சீனதூதரகம் டுவிட்டர்பதிவில் குறிப்பிட்டுள்ளது.




சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று (02) இலங்கைக் குவருகை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு