10,Jun 2026 (Wed)
  
CH

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined variable: readmore_headline_slider

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: standart/news_view.php

Line Number: 388

Backtrace:

File: /var/www/html/application/views/frontend/standart/news_view.php
Line: 388
Function: _error_handler

File: /var/www/html/application/core/My_Loader.php
Line: 184
Function: view

File: /var/www/html/application/controllers/Index.php
Line: 260
Function: view

File: /var/www/html/index.php
Line: 315
Function: require_once

ஆன்மிகம்

கோயிலுக்குச் செல்லும்போது கட்டாயம் தவிர்க்க வேண்டியவை!

அமைதியான வாழ்வை வாழ்வதற்காக தினந்தோறும் ஆலயத்திற்குச் சென்று கடவுளை தரிசனம் செய்கிறோம். அதுமட்டுமின்றி, பல நல்ல அதிர்வுகள் கோயில் முழுவதும் பரவி இருக்கும் என்பதால் நாம் கோயிலுக்குச் செல்லும்போது நம்மை அறியாமலேயே நேர்மறை ஆற்றல்கள் அதாவது நல்ல அதிர்வுகள் நம்முள் பரவுகிறது.

இறைவனை வழிபடும்போது ஆர்வத்தின் மிகுதியால் நம்மை அறியாமலேயே நாம் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். சிலநேரங்களில் சாஸ்திரங்களின் விதிகளையும் மீறிவிடுகிறோம். அது என்ன? கோயிலுக்குச் செல்லும்போது என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

• அகத்தூய்மை மட்டுமின்றி புறத்தூய்மையையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். எனவே, குளிக்காமல் கோயிலுக்குள் செல்லவே கூடாது.

• பிறப்பு, இறப்பு, தீட்டு இவற்றுடன் எக்காரணம் கொண்டும் கோயிலுக்குள் நுழையக்கூடாது.


• பெண்கள் தலைவிரி கோலத்துடன் கோயிலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

• கோயிலுக்குச் செல்லும் போது நம்மால் இயன்ற பூ, பழம், என ஏதாவதொன்றை வாங்கிக்கொண்டு தான் செல்லவேண்டும்.

• ஈரத்துணி உடுத்திக்கொண்டு செல்லக்கூடாது. மேலும், அரைகுறை ஆடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.

• கைலி அணிந்து செல்வது, கடவுளை அவமானப்படுவதற்குச் சமம்.

• பெண்கள் சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தல் கூடாது.


• கொடிமரத்தின் அருகில் மட்டும் தான் விழுந்து கும்பிடவேண்டும்.

• சன்னதியின் முன்பு கைகளைத் தட்டியோ, சொடக்கு போட்டோ தெய்வத்தை வணங்கக்கூடாது.

• விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

• கோயிலை அவசர அவசரமாக வலம் வருதல் கூடாது.

• பலிபீடத்தில் விளக்கு ஏற்றி வைக்கக் கூடாது.

• நந்திக்கும் சிவபெருமானுக்கு இடையில் சென்று சுற்றிவரக்கூடாது.

• கோயிலினுள் இருக்கும்போது தெய்வ சிந்தனையுடன் இருக்க வேண்டுமே தவிரத் தேவையற்ற கதைகளை உரக்கப் பேசுதல் கூடாது.

• இறைவனை தரிசிக்கும் போது தோளில் தூண்டு அணிவது கூடாது.

• விளக்கேற்றிவிட்டு எண்ணெய் கரைகளை அக்கம் பக்கத்தில் தடவக் கூடாது.

• உறக்கமாகப் பேசுவதோ, கோயிலில் உறங்குவதோ கூடாது.

• பெண்கள் கைகளில் வளையல் அணிந்துதான் விபூதி குங்குமம் பெற வேண்டும்.

• கோயிலின் ஸ்தல விருட்சங்களை இரவில் சுற்றவோ, வழிபடவோ கூடாது.

• கோயிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்ததும் முகம், கை, கால்களைக் கழுவுதல் கூடாது. சிறிது நேரத்திக்கு பின் கழுவலாம்.

நம் பாவங்களைத் தொலைக்கவும், மன அமைதிக்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் தான் கோயிலுக்குச் செல்கிறோமே தவிர, நம்மை அறியாமல் தப்பி தவறியும் எந்த பாவத்தையும் சம்பாதித்து விடக்கூடாது.

கோயிலுக்குச் செல்பவர்கள் இவற்றையெல்லாம் கடைப்பிடித்து தெய்வத்தின் பூரண அருளைப் பெறுங்கள்.






கோயிலுக்குச் செல்லும்போது கட்டாயம் தவிர்க்க வேண்டியவை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு