10,Jun 2026 (Wed)
  
CH
இந்திய செய்தி

உதவி எண்ணை அறிவித்தது மத்திய அரசு

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது மற்றும் எதிர்கொள்வது தொடர்பாக இந்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் +91-11-23978046 என்ற கொரோனா வைரஸ் உதவி எண்ணும் இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.





உதவி எண்ணை அறிவித்தது மத்திய அரசு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு