27,Apr 2024 (Sat)
  
CH
உலக செய்தி

ஹவாய் காட்டுத்தீயின் வேகம் அதிகரித்ததும் வேறு வழியின்றி நீருக்குள் குதித்த மக்கள்

ஹவாய் காட்டுத்தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர்.

ஹவாயில் காட்டுதீயினால் முற்றாக அழிவடைந்துபோன லகையினாவின் மக்கள் தங்கள் பகுதிகளிற்கு திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.


இந்த நிலையில் இழப்புகள் குறித்த விபரங்கள் வெளியாகின்றன.

அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் காணாத அழிவுகளை காணவேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்தவார தீ காரணமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரம் முற்றாக அழிவடைந்துள்ளது.

தங்கள் ஆடைகளுடன் அந்த பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் தாங்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்கவேண்டிய நிலையேற்படலாம் என கவலை வெளியிட்டுள்ளனர்.

ஹவாயின் சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறையில் உள்ள அதேவேளை மோசமாக பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதால் அந்த பகுதிகளிற்கு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

லகைனா அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்தும் மின்சாரமும் நீரும் இல்லாத நிலை காணப்படுகின்றது.



கரையோர காவல்படையினர் நகரின் துறைமுக பகுதியில் நீரிலிருந்து 17 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

மிகவும் பயங்கரமான சம்பவங்கள் குறித்து கேள்விப்படுவதாக சுற்றுலாப்பயண முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீரிற்குள் குதித்தனர் - தீ மிகவேகமாக பரவியதால் மக்கள் நீரில் குதித்தனர் அது மாத்திரமே அவர்களுக்கான ஒரேவழியாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.





ஹவாய் காட்டுத்தீயின் வேகம் அதிகரித்ததும் வேறு வழியின்றி நீருக்குள் குதித்த மக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு