சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது. கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், உணவாகவும் சீன மக்கள் சாப்பிட்டதால் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது.
மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவும் இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 132பேர் உயிழந்துள்ளனர். மேலும், 6000 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அறிவுரை வழங்கும்படி இமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில் உள்ள திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவுக்கு முகநூல் மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதை அடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் ‘ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து மன அமைதி மற்றும் கவலையில் இருந்து விடுபடலாம். இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும், என தலாய் லாமா தெரிவித்தார்.
மேலும், அந்த மந்திரத்தை அவர் உச்சரிப்பது போன்ற வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..