27,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளுக்குள் நுழைந்துள்ள..!

சீனாவில் உருவான கொறோனா வைரஸ் மேலும் 17 நாடுகளில் பரவியுள்ளது.


சீனாவில் மாத்திரம் 5 ஆயிரத்து 974 பேர் கொறோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது.


நேற்றைய தினத்தில் மாத்திரம் 26 பேர் மரணித்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதேநேரம், ஆயிரத்து 459 பேர் கொறோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இதனிடையே, தாய்லாந்தில் 14 பேரும், ஹொங்கொங்கில் 8 பேரும், ஜப்பானில் 6 பேரும், அமெரிக்கா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மெகோ முதலான நாடுகளில் தலா 5 பேரும், மலேசியா, தென்கொரியா மற்றும் தாய்வானில் தலா 4 பேரும், ஃப்ரான்ஸில் 3 பேரும், வியட்நாமில் 2 பேரும் கொறோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.


அத்துடன், கனடா, ஜேர்மனி, கம்போடியா, நேபாளம் மற்றும் இலங்கை முதலான நாடுகளில் தலா ஒவ்வொரும் இந்த வைரஸ் தாக்கமுடையவர்களான அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இவ்வாறான நிலையில், கொறோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தங்களது நாட்டவர்கள், சீனாவுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என பல்வேறு நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.


அத்துடன், சீனாவுக்கான விமான சேவைகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தவதற்கு பல நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.


இந்த நிலையில், கொறோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம், சீனாவுக்கு விசேட குழுவொன்றை அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





கொரோனா வைரஸ் மேலும் 17 நாடுகளுக்குள் நுழைந்துள்ள..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு