09,May 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

கணவன் மனைவி உறவு சிறக்க ஆயுளுக்கும் மேம்பட முக்கிய குறிப்புகள்!

தாம்பத்திய வாழ்க்கையின் போது ஒக்ஸிடாஸின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். மேலும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்கலாம். தாம்பத்திய உறவில் ஈடுபடும் தம்பதியர் நிம்மதியான உறக்கத்தை பெறலாம். மேலும் துணையுடன் நெருக்கமான உணர வைத்து இருவருக்குமான அந்நியோன்யத்தை அதிகரிக்கிறது

உறவில் திருப்தி

பாலுறவில் திருப்தி அடையும் தம்பதியர் நெருக்கமான உறவில் இருப்பார்கள். இது உடலுறவு நெருக்கத்தை விட அதிகமானது. வாரத்தில் நான்கு அல்லது மூன்று நாட்களாவது உறவில் இருக்க வேண்டும் இது வழக்கமான அட்டவணையாக பார்க்காமல் துணையுடன் உடல் ரீதியாக நெருங்கி பழகுவது ஆரோக்கியமான இடத்தில் இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

இருவருக்கும் பாலியல் உறவு குறித்த விழிப்புணர்வு

ஒருவருக்கொருவர் உறவில் ஆர்வமாக ஈடுபடுவது போன்று உறவு குறித்த விஷயங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உடலியல் சிற்றின்ப மண்டலங்கள், துணைக்கு வேண்டிய தூண்டுதல், பாலியல் வாழ்க்கையில் புதுமையான விஷயங்களை நுழைத்தல் போன்றவை குறித்து அறிவது அவசியம்.

இருவருக்கும் உடல் தொடர்பு

உடல் தொடர்பு என்பது இணைப்பு மற்றும் நம்பிக்கையை உருவாக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவி என்கிறார்கள் பாலியல் சிகிச்சை நிபுணர்கள். பாலியல் தெரபி நிபுணர்கள் சென்சேட் ஃபொகஸ் என்னும் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். பல்வேறு வகையான தொடுதல் எப்படி உணரவைக்கிறது என்பதை ஆராயும் பயிற்சியான இதை பாலியல் வாழ்க்கையில் இலக்கை அடையும் நிலையை எளிதாக்குகிறது. சிற்றின்ப தொடுதலை பயிற்சி செய்வது நெருக்கத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது. வாழ்நாள் முழுவதும் இதை நீடிக்க வைக்கிறது.

உச்சகட்டம் குறித்து விவாதியுங்கள்

உறவின் போது லிபிடோ ஆர்வம் குறைவாக இருந்தால் தம்பதியர் அதிருப்தி அடையலாம் என்கிறது ஆய்வுகள். உங்கள் லிபிடோ பின் தங்கியிருந்தால் அல்லது உச்சக்கட்டத்தை அடைவதில் சிக்கல் இருந்தால் துணையுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உடலில் ஏதேனும் அசெளகரியம் உணர்ந்தால் துணைக்கு தெரியப்படுத்துங்கள்.


உறவில் நெகிழ்வாக இருப்பது அவசியம்

உடலுறவில் எதை விரும்புகிறீர்கள் எவ்வளவு அடிக்கடி விரும்புகிறீர்கள், அது எவ்வளவு முக்கியம் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். பாலியல் மற்றும் முன்னுரிமைகள் வயது, உடல் ஆரோக்கியம் மற்றும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்கள் ஆகியவற்றுடன் காலப்போக்கில் மாறலாம். எனினும் பாலியல் தேவைகளில் ஆர்வமாகவும் நெகிழ்வாகவும் இருக்கும் தம்பதியர் தங்களை பற்றி நன்றாக உணர்வார்கள். இது பாலியல் வாழ்க்கையை சிறப்பாக வைத்திருக்க உதவும்.


வயதாகும் போது

வயதாகும் போது உடல் பாலியல் தூண்டுதல்களுக்கு பதிலளிக்க அதிக நேரம் எடுக்கலாம். வயதான ஆண்களில் குறைந்த டெஸ்டோஸ்ட்ரான் அளவுகள் விறைப்புத்தன்மையை பெறுவதை கடினமாக்கும். மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜனன் வீழ்ச்சி பெண்களில் வறண்ட பிறப்புறுப்பு மற்றும் மெதுவான விழிப்புணர்வு உண்டு செய்யும். அதனால் நேரம் ஒதுக்கி உறவு கொள்வதன் மூலம் மகிழ்ச்சியை இழக்காமல் இருக்கலாம். தேவையெனில் மருத்துவரின் ஆலோசனையின் படி லூப்ரிகண்ட் பயன்படுத்துவது நன்மை அளிக்கும்.

உச்சகட்டம் அவசியமா

உச்சகட்டம் என்பது பாலியல் சந்திப்பின் குறிக்கோள் அல்ல. சில நேரங்களில் இது அதிக மன அழுத்தத்தை உருவாக்கலாம். சிற்றின்ப வழிகளில் தொடுவது துணைக்கு எந்த நிலையிலும் நெருக்கத்தை உருவாக்க போதுமானது. துணையின் பாலியல் தொடக்கப்புள்ளி எங்குள்ளது என்பதை புரிந்து கொள்வது உடலுறவை நீண்ட தூரம் அழைத்து செல்லும். ஆண்களுக்கு உடனடி உச்சகட்டமும் பெண்களுக்கு கூடுதல் நேரமும் தேவைப்படுவது என இந்த வேறுபாடுகளுக்கு இடம் அளிப்பது பரஸ்பர திருப்தியை அதிகரிக்க செய்யும். இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றும் தம்பதியர் அந்நியோன்யமாக இருப்பதோடு மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்நாள் முழுவதும் எதிர்கொள்வர்




கணவன் மனைவி உறவு சிறக்க ஆயுளுக்கும் மேம்பட முக்கிய குறிப்புகள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு