28,Apr 2024 (Sun)
  
CH
ஆரோக்கியம்

ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து உணவுகள்

நம் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான மினரல் இரும்பு சத்து ஆகும். முக்கியமாக ரத்த உற்பத்திக்கு உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான சத்து. இந்த இரும்புச்சத்தை பயன்படுத்தி தான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஒக்சிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும்.

மேலும் தசைகளுக்கு ஒக்சிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம் உடல் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களின் குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்படலாம். மற்றவர்ளுடன் ஒப்பிடும் போது பெண்கள், அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், குழந்தைகள், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஹீமோகுளோபின் எனும் புரவிதமானது உடலின் உள் உறுப்புகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து மிகவும் முக்கியம். ரத்த சோகை அதாவது இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் பொழுது உடலில் ஹீமோகுளோபின் அளவுகள் குறையலாம். இதனால் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, மார்பு வலி, சீரற்ற இதயத்துடிப்பு, மயக்கம் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல அறிகுறிகளை உணரலாம். இரும்புச்சத்து குறைபாட்டின் இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள். உணவில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதை சரி செய்ய முடியும்.

உலர்ந்த அத்திப்பழம் இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க செய்கிறது. இன்றைய வாழ்க்கை சூழலில் பெரும்பாலான பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரத்த பற்றாக்குறையை பூர்த்தி செய்ய காலையில் இரண்டு உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடலாம். மேலும் இதில் உள்ள கால்சியம் மற்றும் நார்ச்சத்து எலும்புகள் மற்றும் செரிமானத்திற்கு நன்மை தருகின்றன.

பேரிச்சம்பழம் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் பேரிச்சம்பழங்களை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் இதில் உள்ள இரும்புச்சத்து வைட்டமின்கள் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன. சிறந்த பலன்களை பெற காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் பேரிச்சம் பழங்களை சாப்பிடவும்.


உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பு உலர் திராட்சை மற்றும் பாதாம் பருப்பில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. பாதாமில் கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து குறைபாட்டை போக்க பாதாம் மற்றும் உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். சாலியா விதைகள் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் நிறைந்துள்ளது. சாலியா விதைகளை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவுகள் அதிகரிப்பதோடு மட்டுமின்றி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.




ஹீமோகுளோபின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து உணவுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு