09,May 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

பாலியல் ஆர்வமும் ஆரோக்கியமும் கெடுவதற்கு உடல் ரீதியான பிரச்சினைகளும் மன ரீதியான பிரச்சினைகளும் காரணம்

 

பாலியல் ஆர்வமும் ஆரோக்கியமும் கெடுவதற்கு உடல் ரீதியான பிரச்சினைகளும் மன ரீதியான பிரச்சினைகளும் காரணமாக இருக்கின்றன. இதற்கான காரணத்தையும் அறிகுறிகளையும் முன்கூட்டியே சரியாகக் கண்டுபிடித்து விட்டால் இந்த பிரச்சினையை எளிதாக சரிசெய்து விட முடியும்.

 

பாலியல் ஆர்வமும் ஆரோக்கியமும் கெடுவதற்கு உடல் ரீதியான பிரச்சினைகளும் மன ரீதியான பிரச்சினைகளும் காரணமாக இருக்கின்றன. இதற்கான காரணத்தையும் அறிகுறிகளையும் முன்கூட்டியே சரியாகக் கண்டுபிடித்து விட்டால் இந்த பிரச்சினையை எளிதாக சரிசெய்து விட முடியும்.

டிமென்ஷியாவும் பைபோலார் நோயைப் போல மன ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினை தான். இந்த டிமென்ஷியா பாதிப்பு ஏற்படும் போது வழக்கமான குணாதிசயங்கள் மறறும் நடத்தைகளில் நிறைய மாற்றங்கள் உண்டாகும். இதனால் அவர்களுடைய பாலியல் ஆர்வம் அதிகரிப்பதோடு வித்தியாசமான நடத்தைகளிலும் ஈடுபடுவாகளாம்.

ஆண், பெண் இருவரையுமே இந்த டிமென்ஷியா மிக மோசமாகவே பாதிக்கச் செய்கிறது. இதன் காரணமாக பாலியல் ஈர்ப்பும் குறைந்து கொண்டே போகும். டிமெண்ஷியாவுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதனால் ஏற்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைக்கும் சேர்த்தே சில சமயங்களில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

பெரும்பாலும் இந்த பிரச்சினை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உண்டாகிறது. அதாவது பிறப்புறுப்புகளில் திடீரென அதிர்வுகள் தோன்றும். அவை பாலியல் உச்சத்தைப் போன்றே இருக்கும்.

குறிப்பாக சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பு பகுதியில் ஏற்படும் சில மெல்லிய அதிர்வுகளால் இந்த பிரச்சினை ஒருசில பெண்களுக்கு இருக்கிறது. இந்த பிரச்சினை நாள்பட்ட நிலைக்குச் செல்லும்போது அவர்களுக்கு இயல்பாக இருக்கும் பாலியல் ஈர்ப்பும் ஆர்வமும் இயல்புக்கு மீறி அதிகரித்துக் கொண்டே போகும். இதற்கு ஆன்டி டிப்ரசண்ட்ஸ் மருந்துகள், ஹார்மோன் தெரபிகள் ஆகியவை சிகிச்சைகளாகத் தரப்படுகின்றன.

ரேபிஸ் நோய் பாதிப்பு கூட திடீரென பாலியல் ஆர்வத்தை அளவுக்கு அதிகமாகத் தூணு்டி ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமாம். ரேபிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு அந்த வைரஸின் தாக்கம் மூளைக்குத் தொற்றிக் கொள்ளுமாம்.

மூளையில் ஏற்படும் இத்தகைய இன்ஃபிளமேஷன்களால் மிக மோசமான விளைவுகள் உண்டாகின்றன. சிலருக்கு காரணமே இல்லாமல் அளவுக்கு அதிகமாக பாலியல் ஈர்ப்பு ஏற்படுவது, சிலர் விலங்குகளைப் போலவே நடத்தைகளில் மாற்றங்கள் அடைவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இவற்றைத் தடுக்க தான் நாய்க்கடி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.

சில வகையான நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும் இந்த வகையாக பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகின்றன.

மூளை நரம்புகளில் ஏற்படும் சில வகையான சேதங்கள் கூட இதுபோன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் விகாரமான அதீத பாலியல் உணர்வுகளையும் ஏற்படுத்தக் கூடும். இவற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

பாலியல் ஆர்வம் அதிகமாக இருக்கிறது என்கிற பெயரில் சிலர் பாலியல் அடிமைகளாகவே மாறியிருப்பார்கள். எப்போது பார்த்தாலும் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசுவது, ஆபாச படங்கள் அதிகமாக பார்ப்பது, அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்ற விஷயங்களைத் திரும்பத் திரும்ப செய்வார்கள்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் மூளையில் டோபமைன் அதிகரித்து இயல்புக்கு அதிகமாக பாலியல் எண்ணத்தைத் தூண்டும். அது தொடரும்போது நோய் நிலையாக மாறிவிடும்





பாலியல் ஆர்வமும் ஆரோக்கியமும் கெடுவதற்கு உடல் ரீதியான பிரச்சினைகளும் மன ரீதியான பிரச்சினைகளும் காரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு