18,May 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும்,08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளனர்- வைத்தியர் அரங்கன்

வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையில் கடந்த  வருடம் 6 ஆம் மாதத்தில் இருந்து இதுவரை ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளார்கள். 

 

இதன்படி வைத்தியர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் சென்றுள்ளார்கள். விசேட வைத்திய நிபுணர்கள் 272 பேர் சென்றுள்ளனர். பொருளாதார நெருக்கடி, வேலை செய்வதற்கான பொருத்தமான வளங்கள் இன்மை, இடவசதிகள் போதாமை , வைத்தியர்களுக்கான மருந்துகள், விடுதிகள், பாதுகாப்பு பிரச்சனை  என்பன இதற்கு காரணங்களாகும்

. வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒரு வைத்திய நிபுணர் கூட இல்லை. என தெரிவித்துள்ளார்

மேலும் அவர் கூறுகையில்  வவுனியா வைத்தியசாலைக்கு அண்மையில்  ஒரு வைத்திய நிபுணர் நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய நியமனக் கடிதத்தில் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களையும் பார்க்குமாறு  தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

 ஒரு வைத்திய நிபுணர் எவ்வாறு 4 மாவட்டங்களை பார்க்க முடியும். அவ்வளவு தூரம் எங்களிடம் வைத்திய நிபுணர்கள் இல்லை. 

இன்னும் 5000 இற்கு மேற்பட்டோர்  செல்வதற்கு தயாரான நிலையில் உள்ளனர். இதனை தடுக்க வேண்டுமானால் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அவர்கள் விருப்பத்துடன் வேலை செய்யக் கூடிய நிலை உருவாக்கப்பட வேண்டும்  இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு எமது சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வரவேண்டும் எனத் தெரிவித்தார்.

 





வவுனியா மாவட்ட வைத்தியசாலைகளில் இருந்து 11 வைத்திய நிபுணர்களும்,08 வைத்தியர்களும் வெளிநாடு சென்றுள்ளனர்- வைத்தியர் அரங்கன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு