இங்கிலாந்தில் வசித்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டினால் டி அல்விஸ் என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பான தகவல்களே வௌியாகியுள்ளன. க்ராய்டனில் உள்ள விட்கிஃப்ட் பாடசாலையில் கல்வி கற்ற டினால் ஒரு சிறந்த மாணவராவார்.
பாடசாலையில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். இந்தக் கனவுகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் வகையில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி அவர் மரணமானார். டினாலின் மரணம் தற்கொலை என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்தன.
தனது நிர்வாண புகைப்படங்களை வெளியிடுமாறு சிலர் விடுத்த மிரட்டல் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நபர் அல்லது இடம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை எனவும் அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இருப்பினும், VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நைஜீரியாவிலிருந்து டினாலுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சமூக ஊடகங்கள் மூலம் உரிய கப்பம் கோரிய நபர், அவருக்கு இரண்டு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இவர் எடுத்த இரண்டு புகைப்படங்கள் சந்தேகநபர்களின் கைகளில் சிக்கியிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..