எதிர்வரும் பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியாது என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கப்பெறும் என சிலர் தெரிவித்து வருகின்றனர்.
அது முற்றிலும் பொய்யானதாக மாறிவருகிறது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சி என்ற ஒன்று இல்லாது போயுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நிதியினை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொள்ளையிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கூறுகிறார்.
ஆனால் அந்த நிதியை திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோரே கையாண்டனர் அவர்களே அதற்கு பிரதான காரணம் என கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிக்கிறார்.
அதேநேரம், தமது தோல்விக்கு கட்சிக்குள் இருப்பவர்களே காரணம் என கருத்து சஜித் பிரேமதாஸ தெரிவிக்கிறார்.
தற்போது கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் வெளிப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாதவர்கள் எவ்வாறு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கப்போகிறார்கள் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..