கொரோனா வைரஸ் இதுவரை 26 உலக நாடுகளுக்கு வியாபித்துள்ளது.
இந்த வைரஸால் சீனாவில் மாத்திரம் இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றைய நாளில் மாத்திரம் சுமார் 56 பேர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 16,600 பேர் வரையில் கொரானா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட உலக நாடுகளில்மசகு எண்ணெய்க்கான கேள்வி குறைவடைந்தமையே இதற்கு காரணமாகும்.
அதன்படி கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின்னர் நேற்று ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் மசகு எண்ணெயின் விலையை நிலையாக பேணுவதற்காக ரஷ்யா உள்ளிட்ட ஒபேக் நாடுகள் இன்று கூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளன.
எவ்வாறாயினும் கடந்த காலங்களில் உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தாலும் இலங்கையில் அதற்கமைய அதிகரிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.













0 Comments
No Comments Here ..