கடந்த (2023) ஆண்டு முதல் எட்டு மாதங்களில் 5,300 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பேருந்துகள், பயணிகள் வான்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள் ஆகியவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் 2023 ஆம் ஆண்டில், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 4,193 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், 2022 ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்தில், 10,017 மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் இக்காலப்பகுதியில் 5824 ஆக குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 596 கார்கள், 380 பேருந்துகள் மற்றும் பயணிகள் வான்கள், 34 முச்சக்கர வண்டிகள், 92 சரக்கு வாகனங்கள் மற்றும் 05 தரைவழி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..