கனடா - ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக மாகாண தொழில், குடிவரவு, பயிற்சி அமைச்சர் டேவிட் பிக்கினி தெரிவித்துள்ளார். அதன்படி, ஒன்றாரியோ மாகாணத்தின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் குறைந்த பட்ச சம்பளம் 65 சதங்களாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கனடாவில் மணித்தியாலம் ஒன்றுக்கு வழங்கப்படும் 16.55 டொலர் சம்பளம் 17.20 டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது. அத்தோடு, அந்நாட்டின் நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில் 3.9 வீதமாக சம்பளங்கள் உயர்த்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், வாரமொன்றுக்கு 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் 1355 டொலர்கள் வரையில் சம்பளம் பெறமுடியும்.
0 Comments
No Comments Here ..