22,Oct 2024 (Tue)
  
CH
CANADANEWS

ரயில் முன்பு செல்பி - நொடியில் பறிபோன உயிர்!!

கனேடிய பசிபிக் கன்சாஸ் சிட்டியை (CPKC) உருவாக்கிய நட்புரீதியான இணைப்பைக் கொண்டாடும் விதமாக, 1930 இல் உருவாக்கப்பட்டது ஒரு நீராவி இன்ஜின் ரயில்.

'பேரரசி' என்று அழைக்கப்படக்கூடிய இந்த பழங்கால ரயில் கடந்த ஏப்ரல் மாதம் கால்கரியில் இருந்து புறப்பாட்டு கனடா, அமெரிக்கா வழியாக மெக்சிகோவைச் சென்றடையகிறது.

இந்த ரயில் இன்று (07) மெக்சிகோவில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது. பின்னர், ஜூலை மாதம் கனடா திரும்பி, அத்துடன் அங்கு ஓய்வு பெறுகிறது. இந்நிலையில், பேரரசி ரயில் மெக்சிகோவில் நுழையும்போது ஹிடால்கோ பகுதி அருகே பலரும் புகைப்படம் எடுப்பதற்காக கூடினர். அப்போது, தன் மகனுடன் வந்திருந்த இளம்பெண் ஒருவர் பேரரசி ரயில் முன்பு செல்பி எடுக்க தனது தொலைபேசியை எடுத்தார். ரயில் அருகே வரும்போது, தண்டவாளம் அருகே சென்ற இளம்பெண் செல்போனுடன் முட்டிபோட்டு அமர்ந்தார்.


அப்போது, ரயிலின் எஞ்சின் இளம்பெண்ணின் தலையில் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெண் அடிபட்ட நொடியிலேயே உயிரிழந்தார். ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 






ரயில் முன்பு செல்பி - நொடியில் பறிபோன உயிர்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு