17,Mar 2026 (Tue)
  
CH
WORLDNEWS

நெதர்லாந்தில் பொதுமக்களை சிறைப்பிடித்த மர்ம நபர்கள்!

நெதர்லாந்தில் (netherlands) பொதுமக்கள் சிலரை மரம நபர்கள் சிறைப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஒன்றில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது திடீரென கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் புகுந்த நபர்கள் அங்கிருந்த பணியாளர்கள் உட்பட பொதுமக்களையும் சிறைபிடித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் விரைந்து வந்து கேளிக்கை விடுதிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன் பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கேளிக்கை விடுதிக்குள் எத்தனை பேர் பணய கைதிகளாக உள்ளனர், ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்தது யார்? என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






நெதர்லாந்தில் பொதுமக்களை சிறைப்பிடித்த மர்ம நபர்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு