ஐந்தாவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் போட்டியின் வீரர்கள் ஏலம் இம்மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நண்பகல் ஆரம்பமாகவுள்ளது.
ஒவ்வொரு அணியும் ஒரு அணியில் அதிகபட்சமாக 24 மற்றும் குறைந்தபட்சம் 20 வீரர்களை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு ஒவ்வொரு அணியும் ஆறு வெளிநாட்டு வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏலம் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக ஔிபரப்பப்படவுள்ளது.
ஐந்தாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 1 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 24 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..