அநுரவின் ஆட்சி தமிழ் அரசியல்வாதிகளுக்கு சிக்கல் நிறைந்த ஆட்சியாக அமையும் என மக்களால் எதிர்பார்க்கபடுகிறது
அடுத்து வரும் ஆறு வாரங்களில் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசியல்வாதிகள் தமது நாடாளுமன்ற பதவிகளை பெற்றுக்கொள்ள மக்களிடம் வாக்குகளை கேட்கத் தயாராகின்றனர்.
இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றார்கள் என்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
இந்நிலையில் எவ்வாறான பொய்களை கூறி தமது இருப்புக்களை தமிழ் அரசியல்வாதிகள் தக்க வைக்கப் போகின்றார்கள் என்பதே தற்போதுள்ள சவாலாகும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் அடிப்படையில் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி மக்களால் வெறுக்கப்படும் ஒரு நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.
தேர்தலின் போது சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களிக்குமாறு இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரியிருந்தனர்.
இவ்வாறான நிலையில் வடக்கு, கிழக்கில் சஜித் முன்னிலை பெற்ற போதும் இரண்டாம் மூன்றாம் நிலையை எட்டியவர்களின் வாக்கு வீதங்கள் அதிகரித்துள்ளமை தமிழரசு கட்சிக்கு பெரும் தோல்வியாக மாறியுள்ளது.
இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் கடும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
0 Comments
No Comments Here ..