மேஷம்;
நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும். ஆசிரியர் மாணவர்கள் மனநிலைக்கேற்ப ஒத்துழைப்பர். பெண்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இனிமையான சம்பவம் உண்டாகும். பிள்ளையின் திருமண விழா பற்றி திட்டமிடுவீர்கள். வழக்கு வெற்றி பெறும். பங்குச் சந்தையில் கவனம் தேவை.
ரிஷபம்;
உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. அத்யாவசியமானதா என பார்த்து செலவு செய்யவும். இளைஞர்களுக்கு நல்ல வேலை கிட்டும்.
மிதுனம்;
கலைஞர்களது படம் திரைக்கு வர ஆயத்தமாகும். ஆசிரியர்கள் பாராட்டினை பெறுவர். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். மனம் அமைதியைத் தேடும். பெரியவர்களின் சந்திப்பு அனுபவத்தை கூட்டும். பழைய கடனில் ஒரு பகுதி தீரும். மாணவர்கள் சாதனைப் படைப்பர்.
கடகம்;
தொழில் லாபம் தரும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். உடல் நலம் சிறப்படையும். நிலம், வீடு புதிய சொத்து வாங்குவீர்கள். வெளி மக்கள் தொடர்பு அதிகரிக்கும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.
சிம்மம்;
தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். இரவு நேர பயணத்தின் போது அதிக கவனம் தேவை. அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது.
கன்னி;
எதிர்பார்த்த ஒரு காரியம் சிறப்பாக நடந்தேறும். வேற்றுமொழி மதத்தவர் தங்களுக்கு உதவுவர். திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். மாணவர்களின் கனவு நனவாகும். ரியல் எஸ்டேட் மற்றும் கமிஷனில் இருப்பவர்களுக்கு நல்ல ஒரு தொகை கிட்டும்.
துலாம்;
பழைய வாகனத்தை கொடுத்து விட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். தொழில் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மகள் மற்றும் மகன் படிப்புக்காக வாங்கிய கடனில் ஒரு தொகையை அடைத்து விடுவீர்கள். உடல் நலம் சிறக்கும்.
விருச்சிகம்;
அலுவலகத்தில் தங்கள் மதிப்பு உயரும். மாணவர்கள் தாங்கள் விரும்பிய துறையை தேர்ந்தெடுப்பர். சிலருக்கு காதல் கண்சிமிட்டும். வேலையில்லாதவருக்கு நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுவர். விவசாயிகளுக்கு கேட்ட கடன் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு;
இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று முக்கியமான விசயமாக இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்ளளாம்.புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று இறைவனை பிரார்த்தித்து கொள்வது நல்லது. யாரிடமும் வாக்குவாதம் செய்வது தவிர்ப்பது நல்லது.
மகரம்;
பெண்களுக்கு அறியாமை விலகும். புதிய நட்பால் நன்மை உண்டாகும். பணவரவில் பங்கம் இல்லை. வெளி நபர்களிடம் எச்சரிக்கைத் தேவை. அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். சிறு தூர பயணம் வெற்றி தரும். தம்பதிகளிடையே அன்பு கூடும்.
கும்பம்;
எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். பெற்றோரின் நீண்ட நாள் பிரச்சினை விலகும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள்.சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். விளையாட்டில் வெற்றி தொடரும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். தாயின் உடல் நலம் சீரடையும்.
மீனம்;
உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள். மனதில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். மூத்த சகோதரரால் நன்மை விளையும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.
0 Comments
No Comments Here ..