25,Jun 2025 (Wed)
  
CH
சோதிடம்

இன்றைய நாளுக்கான ராசிபலன் (21.06.2025)

மேஷம்;

வழக்கு சாதகமாக முடியும். அரசு டென்டர்களில் தங்களுக்கு சாதகமாக முடியும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். 


ரிசபம்;

நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவர். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். அவர்களால் நன்மை உண்டு. பெண்கள் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து அத்தியாசிய பொருள்களை வாங்குவர். உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும்.


மிதுனம்;

இன்று குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். பண வரவு தாமதப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விரும்பிய நபரை கைபிடிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.


கடகம்;

அறுவை சிகிட்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும். வழக்கு சாதகமாக முடியும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர்.


சிம்மம்;

கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். செலவுகள் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. பிள்ளை தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும்.


கன்னி;

இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. 


துலாம்;

பணம் பலவழிகளில் கிட்டும். காதலர்கள் பொறுப்புணர்வர். பிள்ளைகளைப் பற்றிய மனவருத்தம் நீங்கும்.ஆடம்பர செலவினை குறைப்பது நல்லது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பண விஷயத்தில் சிக்கனம் தேவை. எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும். அது தங்களுக்கு ஆனந்தத்தைத் தரும்.


விருச்சிகம்;

மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியர்களின் ஆசி கிட்டும். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் அசதி தோன்றும். வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.


தனுசு;

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தங்கள் மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர்.  மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். வியாபாரத்தில் தாங்கள் நினைத்ததற்கும் மேலாக லாபம் ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.


மகரம்;

கடன் தொல்லை நீங்கி தங்கள் வட்டாரத்தில் தங்களுக்கு மதிப்பு உயரும். தம்பதிகளிடையே மனக்கசப்பு தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். 


கும்பம்;

புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். குடும்ப வருமானத்தை மிகுதிப்படுத்த பகுதி நேர வேலையையும் துவங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது. வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். 


மீனம்;

வியாபாரம் செழிப்பாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். தேகம் மினுமினுக்கும். புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். சகோதர வழி உறவு மேம்படும். இன்று முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். 




இன்றைய நாளுக்கான ராசிபலன் (21.06.2025)

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு