குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பவர்களை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிடும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெருகி வரும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து அதுதொடர்பான சட்டம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
இந்த நிலையில் புதிய சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், அலி முகமது கான், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்பவர்களை பொதுவெளியில் தூக்கிலிடுவதில் எந்தத் தவறும் இல்லை என்று கூறியதையடுத்து இந்தச் சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
0 Comments
No Comments Here ..