யாழ்ப்பாணம், தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் அந்த பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று காலை முதல் காணி உரிமையாளர்களும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பாதுகாப்பு கடமைகளுக்காகக் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் காவல்துறை கலகத்தடுப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பலாலி தையிட்டி விகாரையை அண்மித்த பகுதிகளில் நாளை வரை சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 27 தரப்பினருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..