07,Feb 2026 (Sat)
  
CH
உலக செய்தி

இஸ்ரேல்-ஈரான் மோதல்: அணு ஆயுத மையங்கள் இலக்கு, டிஜிட்டல் கண்காணிப்பு அச்சத்தில்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டிவருவதால் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. இதற்கு எதிராக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றது. 


இந்தநிலையில், இரு நாடுகளிலும் சேதம் உயிரிழப்புகள் பதிவாகின்றது. ஈரானின் அணுஆயுத உற்பத்தி நிலையங்களை தாக்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.


இந்த சூழலில் ஈரானின் அணுஆயுத நிலைகளை தாக்குவதற்கு சக்தி வாய்ந்த குண்டுகளை அமெரிக்காவிடம் கேட்டுள்ளது இஸ்ரேல். இந்த நிலையில் ஈரானின் ரகசியங்களை தெரிந்து கொள்ள இஸ்ரேல் டிஜிட்டல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் என ஈரான் அஞ்சுகிறது.


இதனால் அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய பாதுகாவலர்கள் மடிகணனி மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த ஈரான் தடைவிதித்துள்ளது. இருந்தபோதிலும் தடைக்கான முழு விவரத்தை ஈரான் விவரிக்கவில்லை.




இஸ்ரேல்-ஈரான் மோதல்: அணு ஆயுத மையங்கள் இலக்கு, டிஜிட்டல் கண்காணிப்பு அச்சத்தில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு