09,Jul 2025 (Wed)
  
CH

இலங்கையில் வாகன இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் நிறுத்தம்: 15,000 வாகனங்கள் பாதிப்பு

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகளை ஒரு மாத காலத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளதால், சுமார் 15,000 வாகனங்களுக்கு இலக்கத்தகடுகள் தேவைப்படுவதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி முதல், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.


இந்நிலையில், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 15 நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.




இலங்கையில் வாகன இலக்கத்தகடு அச்சிடும் பணிகள் நிறுத்தம்: 15,000 வாகனங்கள் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு