17,Mar 2026 (Tue)
  
CH

ஹவாயில் கிலாவியா எரிமலை வெடிப்பு: 1000 அடி உயரத்திற்கு தீக்குழம்பு!

அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை, மீண்டும் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக, எரிமலையிலிருந்து சுமார் 1000 அடி (சுமார் 300 மீட்டர்) உயரத்திற்குத் தீக்குழம்பு வெளியேறியுள்ளது.


எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்காவில் பரவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்கா மூடப்பட்டுள்ளது. மேலும், எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "கிலாவியா கால்டெராவில் உள்ள குழி பள்ளத்தில் இருந்து எரிமலைக்குழம்பு சுமார் 1,000 அடி உயரத்திற்கு வெளியேறியது. இந்த வெடிப்பு, ஹவாய் தீவு தேசிய பூங்காவில் சாம்பல் பரவியது. இது கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் 25வது முறையாக வெடித்தது" என்று தெரிவித்துள்ளது.






ஹவாயில் கிலாவியா எரிமலை வெடிப்பு: 1000 அடி உயரத்திற்கு தீக்குழம்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு