20,Jun 2026 (Sat)
  
CH

சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிடியாணை: வரி செலுத்தாத வழக்கு

கொழும்பு நீதவான் நீதிமன்றம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவைக் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று (ஜூன் 23) பிடியாணை பிறப்பித்துள்ளது.


சஜின் வாஸ் குணவர்தன, 2010 முதல் 2012 வரையான காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு 369 இலட்சம் ரூபா வருமான வரி செலுத்தவில்லை எனக் கூறி, அவருக்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.


இந்த வழக்கு மீதான விசாரணைகளுக்காக சஜின் வாஸ் குணவர்தன நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனைக் கருத்தில் கொண்ட நீதவான், அவரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்துள்ளார்.




சஜின் வாஸ் குணவர்தனவுக்கு பிடியாணை: வரி செலுத்தாத வழக்கு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு