கடந்த ஐந்து மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இது, ஜூன் 26 அன்று வரவிருக்கும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட தகவல் ஆகும்.
புதிய அரசாங்கம் 2024 செப்டம்பர் 23 ஆம் திகதி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனைகள் குறித்து பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய விளக்கமளித்தார். அதன்படி, இந்த காலகட்டத்தில், பொலிஸாரால் 1,253 கிலோகிராம் ஹெரோயின், 2,121 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 12,439 கிலோகிராம் கஞ்சா, 22 கிலோகிராம் கொக்கேய்ன் மற்றும் 1.6 மில்லியன் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்
ளன













0 Comments
No Comments Here ..