யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்று தொடர்ந்த நிலையில், குழந்தையின் எலும்புக்கூடு தொகுதி உட்பட மூன்று புதிய மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்மூலம், செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐ நா மனித உரிமைகள் உயர்தனிகர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..