கண்டி, ரட்டேமுல்ல பகுதியைச் சேர்ந்த 12 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவினர், நேற்று (ஜூன் 29) மாலை ஹந்தானை மலை உச்சியைப் பார்வையிடச் சென்றபோது வழி தவறிச் சென்றனர்.
மூடுபனி மற்றும் மழை காரணமாக அவர்களுக்குத் திரும்பி வருவதற்கான பாதையைக் கண்டறிய முடியாமல் போனது. இது குறித்து தங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவித்ததை அடுத்து, இராணுவமும் பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தேடுதல் நடவடிக்கையின் பலனாக, வழி தவறிச் சென்ற மாணவர்கள் உட்பட அக்குழுவினர் அனைவரும் கண்டறியப்பட்டனர். மீட்கப்பட்ட இந்தக் குழுவினர் பேராதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு எவ்வித உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..