ஜூன் 30, 2025 அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) இன்று எச்சரித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தனியார் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அதிகபட்ச விலையை மீறி அரிசி விற்றால் ரூபாய் 5 இலட்சம் முதல் 50 இலட்சம் வரை அபராதம் செலுத்த நேரிடும்.
அத்துடன், தனியுரிமை வர்த்தக நிலையங்களுக்கு ரூபாய் 1 இலட்சம் முதல் 5 இலட்சம் வரை அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்றும் CAA தெரிவித்துள்ளது.
இந்த விலைக்கட்டுப்பாட்டு மீறல்கள் குறித்து பொதுமக்கள் 1977 என்ற இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோர் விவகார அதிகார சபையானது, அரிசி வகைகளுக்கு அதிகபட்ச கட்டுப்பாட்டு விலையை விதித்துள்ளது. இந்த விலைக் கட்டுப்பாடுகள், நியாயமற்ற வியாபாரத்தைத் தடுப்பதற்கும், சந்தை நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும் விதிக்கப்பட்டுள்ளதாக CAA கூறியுள்ளது.













0 Comments
No Comments Here ..