ஜூன் 30, 2025 – அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முன்னெடுக்கும் நோக்கில், கனடா தனது டிஜிட்டல் சேவை வரியை இரத்து செய்துள்ளது.
கனடாவின் நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கனேடிய பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதிக்குள் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவார்கள்.
அடுத்த வாரத்திற்குள் கனேடியப் பொருட்களுக்கான புதிய கட்டண விகிதத்தை நிர்ணயிப்பதாக கனேடியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, இந்த மாத நடுப்பகுதியில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசிய பின்னர், 30 நாட்களுக்குள் புதிய பொருளாதார ஒப்பந்தத்தை முடிக்க ஒப்புக்கொண்ட போதிலும், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில், கனடா டிஜிட்டல் வரி முறையை அறிமுகப்படுத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது அமெரிக்காவுடனான வர்த்தக உறவை மேம்படுத்த கனடா எடுத்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..