மதுரை திருப்புவனம் பகுதியில் காவல்துறையின் சித்திரவதையால் அஜித்குமார் என்ற தனியார் பாதுகாப்புப் பணியாளர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி தமிழக வெற்றிக் கழகம் (TVK) போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, இந்தப் போராட்டத்தை ஜூலை 3ஆம் திகதி எழும்பூரில் நடத்த TVK திட்டமிட்டிருந்தது. இருப்பினும், காவல்துறை அனுமதி கிடைக்காததால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளதால், அஜித்குமாரின் மரணம் தொடர்பான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.













0 Comments
No Comments Here ..