ஹட்டன் - சிங்கமலை அணைக்கட்டில் தவறி விழுந்த 17 வயது மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்.
குறித்த மாணவர் தனது நண்பர்களுடன் அணைக்கட்டுப் பகுதிக்குச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி, தனது பெறுபேறுகளுக்காகக் காத்திருந்த மாணவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..