இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி இன்று (ஜூலை 09) காலை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்தபோது பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மாஹிசாகர் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள இந்தப் பாலம், சுமார் 40 ஆண்டுகள் பழமையானது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்புப் படையினரும், மாநில காவல்துறையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..