தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 'மிஷன் பாசிபிள்' (Mission Possible) என்ற விண்கலம் பசுபிக் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விண்கலத்தில் 166 பேரின் அஸ்திகளும் கஞ்சா விதைகளும் விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்டன.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான செலஸ்டிஸ் (Celestis), இறந்தவர்களின் அஸ்தியை விண்வெளிக்கு அனுப்பி, அவர்களின் நினைவைப் பதிவு செய்யும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இதைச் செயல்படுத்தி வருகிறது.
இந்த எதிர்பாராத விபத்து தொடர்பாக செலஸ்டிஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் விண்வெளிப் பயணங்களில் உள்ள சவால்களையும், தனிப்பட்ட நினைவுகளை விண்வெளியில் பதிவு செய்யும் திட்டங்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
0 Comments
No Comments Here ..