12,Jul 2025 (Sat)
  
CH

தேசிய டென்னிஸ் வீராங்கனையைக் கொடூரமாக சுட்டுக் கொன்ற தந்தை!

மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையான தனது சொந்த மகளையே தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் ஹரியானா மாநிலம் குருகிராமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


குருகிராம் செக்டார் 57 நகரைச் சேர்ந்த 25 வயதான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், தேசிய அளவில் டென்னிஸ் விளையாடிப் பல கோப்பைகளை வென்றவர். தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் விளையாடுவதை நிறுத்திக்கொண்டு, ஒரு டென்னிஸ் அகாடமியைத் தொடங்கி குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து வந்தார்.


கடந்த ஜூலை 10 அன்று, ராதிகா சமையலறையில் உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, அவரது தந்தை தீபக் யாதவ் துப்பாக்கியால் அவரை மூன்று முறை சுட்டார். துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும், உறவினர்கள் ராதிகாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பாகப் பொலிஸார் நடத்திய விசாரணையில், டென்னிஸ் அகாடமியின் வருமானத்தையே நம்பி வாழ்வதாகத் தீபக் யாதவை கிராமத்தினர் கேலிப் பேச்சு பேசி வந்ததும், ராதிகாவின் குணத்தைப் பற்றித் தவறாகப் பேசி வந்ததும் தெரியவந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபக், அகாடமியை மூடுமாறு ராதிகாவிடம் பலமுறை கேட்டுள்ளார். ராதிகா மறுப்புத் தெரிவிக்கவே, அவர் மீது கோபம் கொண்ட தீபக், தனது மகளையே கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தச் செயலைச் செய்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





தேசிய டென்னிஸ் வீராங்கனையைக் கொடூரமாக சுட்டுக் கொன்ற தந்தை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு