கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் ஒரு பெண் சட்டத்தரணி, குறித்த தனியார் நிறுவனத்தின் முச்சக்கர வண்டியை வாடகைக்காகப் பதிவு செய்துள்ளார். ஆனால், ஓட்டுநர் செயலியில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு அழைக்காமல், வேறு ஒரு தொலைபேசி எண்ணில் அப்பெண் பயணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனால், அப்பெண் சட்டத்தரணி தான் பதிவு செய்த முச்சக்கர வண்டியைப் புறக்கணித்து வேறு ஒரு முச்சக்கர வண்டியில் தனது பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது, தனியார் வாகன வாடகை நிறுவன முச்சக்கர வண்டி ஓட்டுநர், அந்தப் பெண் சட்டத்தரணியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநரை மாளிகாவத்தை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..