முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிரான பணமோசடி வழக்கு ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (ஜூலை 11) பிறப்பித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ச மற்றும் டெய்ஸி ஃபோரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, யோஷித ராஜபக்சவும் டெய்ஸி ஃபோரஸ்ட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
விசாரணை மேற்கொள்ளும் நீதிபதி விடுமுறையில் உள்ளதால், வழக்கு விசாரணை ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சுமார் 73 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் குற்றம் இழைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..