கொழும்பு, கோட்டைப் பகுதியில் தெருவிளக்கு கம்பம் ஒன்றின் உச்சியில் ஏறிய இளைஞன் ஒருவர், தீயணைப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையை அடுத்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அதிக சன நெரிசல் மிகுந்த பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அப்பகுதியில் கூடியிருந்த ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த இளைஞன் இவ்வாறு செயல்பட்டதற்கான நோக்கம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..