இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என பல்வேறு துறைகளில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தனது தனிப்பட்ட பழக்கம் குறித்து சுவாரசியமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
'சுக்கிரன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் 'நான்' படத்தின் மூலம் கதாநாயகனாக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனி, 'சலீம்', 'பிச்சைக்காரன்' போன்ற தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். தற்போது லியோ ஜான் பால் இயக்கத்தில் 'மார்கன்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில், செருப்பு அணியாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு விஜய் ஆண்டனி மனம் திறந்து பதிலளித்துள்ளார்.
"செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலுடன் நடக்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது," என அவர் குறிப்பிட்டுள்ளார். "இந்தப் பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு பிரபலம் என்பதால், விமானப் பயணம், ஏ.சி. காற்றில் உறக்கம், பங்களா வீடு என ஆடம்பரமான வாழ்க்கை நம்முடனேயே ஒட்டிக்கொள்கிறது.
ஆசைப்பட்டாலும் அதை விட முடியாது. எனவே, இது போன்று செருப்பு அணியாமல் என்னைப் ஈடுபடுத்தி, என் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்கிறேன்," என்று அவர் தனது வழக்கத்திற்குப் பின்னால் உள்ள தத்துவத்தை விளக்கினார்.
சமீபத்தில் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா பற்றிய ஒரு ரகசியத்தைப் பகிர்ந்து கொண்ட செய்தியும் வெளியாகியுள்ளது. இந்த இரு செய்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன.
0 Comments
No Comments Here ..