21,Mar 2026 (Sat)
  
CH

நாடாளுமன்றத்தில் "சிவப்பு கொள்கலன்" விவகாரம்: அர்ச்சுனா எம்.பி.யின் கூச்சலால் அமளிதுமளி

இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற அமர்வில் பரிசோதனையின்றி கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்கள் மற்றும் அதில் ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடுமையாகக் கூச்சலிட்டதால் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டது.


சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டினார். இதனால் சீற்றமடைந்த அர்ச்சுனா எம்.பி. சபையில் கடுமையான தொனியில் சத்தமிடத் தொடங்கினார். இருப்பினும், அவருக்குத் தொடர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் மேலும் அதிகமாகக் கூச்சலிட்டார்.


இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சபாநாயகரால் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது, கொள்கலன் தொடர்பான விடயங்களை தான் புலனாய்வுப் பிரிவிடம் 5 மணி நேரம் செலவிட்டு கூறியதாக அவர் தெரிவித்தார்.




நாடாளுமன்றத்தில் "சிவப்பு கொள்கலன்" விவகாரம்: அர்ச்சுனா எம்.பி.யின் கூச்சலால் அமளிதுமளி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு