12,Jul 2025 (Sat)
  
CH

நெடுந்தீவு அருகே படகு விபத்து: 14 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியாருக்குச் சொந்தமான படகு ஒன்று, நேற்று (ஜூலை 11) நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவானுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளது. படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.


நல்வாய்ப்பாக, படகிலிருந்த பணியாளர்கள் இருவர் உட்பட 14 பேரும் எவ்வித உயிராபத்தும் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


இடைக்கடலில் ஆபத்தான நிலையில் இருந்த குறித்த சுற்றுலாப் படகிலிருந்து வெள்ளைக்கொடி காட்டுவதை, அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகின் பணியாளர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக விரைந்து செயற்பட்ட அந்தப் படகின் பணியாளர்கள், ஆபத்தில் இருந்த படகிலிருந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாகத் தமது படகிற்கு மாற்றி மீட்டுள்ளனர். அவர்களை மீட்ட ஓரிரு நிமிடங்களிலேயே குறித்த சுற்றுலாப் படகு முழுமையாக நீரில் மூழ்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் கடலில் வேகமாகச் செயற்பட்டு உயிர்களைக் காத்த மனிதநேயச் செயலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.




நெடுந்தீவு அருகே படகு விபத்து: 14 சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு