பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான செவ்வாய் கிரகத்தின் கல்லை, நியூயோர்க்கை சேர்ந்த நிறுவனமொன்று ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது.
குறித்த கல்லினை இந்திய மதிப்பில் 1.7 கோடி ரூபாய் ஆரம்ப தொகைக்கு ஏலம் விடுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த போது, அதிக வெப்பத்தால் எரிந்து இவ்வாறு உருமாறியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இதேவேளை செவ்வாய் கிரக கல்லுடன் சேர்த்து நியூயோர்க்கின் ஏல நிறுவனம், சிறிய டைனோசரின் என்புக் கூட்டையும் ஏலத்தில் விடவுள்ளது.
குறித்த என்புக் கூடு அமெரிக்காவின் வியோமிங் மாநிலத்தில் 1996ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் ஆரம்ப ஏல தொகையாக, இந்திய மதிப்பில் 3.3 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு பொருட்களும், எதிர்வரும் 16ஆம் திகதி ஏலத்திற்கு வருகின்றன.
0 Comments
No Comments Here ..