தமிழகத்தில் 'முதல்வர் வேட்பாளர் விஜய்' என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி அரசியல் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கட்சியின் சார்பில் வைக்கப்படும் பேனர்கள், போஸ்டர்கள், மற்றும் சுவர் விளம்பரங்களில் இந்த வாசகத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் விஜய்யின் அரசியல் அறிமுகத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி மதுரையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு முன்னதாக 'முதல்வர் வேட்பாளர் விஜய்' என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருவது, கட்சித் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.













0 Comments
No Comments Here ..