பலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையிலேயே பிரான்ஸின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும், பிரான்ஸின் இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார். இது "ஆபத்தானது மற்றும் தவறானது" என்றும், பலஸ்தீன அரசை அங்கீகரிப்பது "தீவிரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகும்" என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 Comments
No Comments Here ..