பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் மூலம் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பும் வலுவடைந்துள்ளதோடு, கடற்றொழில், வீடமைப்பு, சமூக வசதிகள், சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார். இலங்கை மக்களுக்காகவே கடன் தொகை மீளச் செலுத்தலை தாமதப்படுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அரசாங்கம் 486 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் இந்தத் தவணைக் கொடுப்பனவை இலகுவாக வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..