இந்து சமுத்திரத்தில், ஆரம்ப கட்ட அதிர்வுகளுடன் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
இலங்கையின் தெற்கு கரையோரத்திலிருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று அதிகாலை 2.34 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
எனினும், இதனால் இலங்கைக்கு பாதிப்புகள் மற்றும் சுனாமி எச்சரிக்கை இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், கரையோர பகுதியில் வாழும் மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
0 Comments
No Comments Here ..