நுகர்வோர் அதிகார சபையின் திருகோணமலை அலுவலகத்தினால், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம், தரச் சான்றிதழ் அற்ற வெளிநாட்டுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா பகுதியில் அமைந்துள்ள மருந்தகங்களில் காலாவதியான பொருட்கள் விற்கப்படுவதாக, தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக, பாவனையாளர் அதிகார சபையின் மாவட்ட இணைப்பாளர் த.வசந்தசேகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..